"கடமையை செய்தால் பாராட்டும், பலனும் தேடி வரும்" - காவல்துறை பதக்கங்கள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

0 997

காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை . குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை போலீசாருக்கு முதலமைச்சர் வழங்கினார். காவல்துறையினர் பதக்கங்களை வாங்கியதை பார்க்கையில், நான் வாங்கியதுபோல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அமைதியான மாநிலத்தில் தான் வளர்ச்சி இருக்கும்; இதனால், தான் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளது. காவல்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பதக்கங்கள் வழங்க தொடங்கி 55 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது; காவல்துறையினரின் பங்களிப்பால் அது சாத்தியமாகி மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது . காவல்துறையினர் தங்கள் கடமையை செய்தால் பாராட்டும், பலனும் உங்களை தேடி வந்து சேரும்.

மக்களை பாதுகாக்கும் காவல்துறையை பாதுகாப்பது அரசின் கடமை என்பதால் அவர்களுக்கென தனி ஆணையம் செயல்படுகிறது. மகப்பேறு விடுமுறை முடிந்து வரும் பெண் காவலர்களுக்கு அவர்கள் கணவர், அல்லது குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு பணிமாறுதல். மகப்பேறு விடுமுறை முடிந்து வரும் பெண் காவலர்கள் 3 ஆண்டுகள் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் பணிமாறுதல் வழங்கப்படும். குற்றமிழைக்கும் குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி போலீசார் தண்டிப்பதை உறுதியாக ஏற்க வேண்டும். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments